Monday, December 03, 2007

Star5. போபால் விபத்தில் பலியான அப்பாவிகளுக்கு ஓர் அஞ்சலி!

இன்றோடு 23 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. தமிழ் இணையத்தில் இன்று எழுதும் பல இளைஞர்கள் இது பற்றிய முழு விவரங்கள் அறிந்திருப்பார்களா என்பது கூட சந்தேகமே.

1984 ஆம் ஆண்டின் டிசம்பர் 3 அதிகாலையில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த 40 டன் மித்தைல் ஐஸோசயனேட் ( Methyl Isocyanate) என்கின்ற விஷ வாயு கிட்டத்தட்ட 2500 முதல் 5000 பேர் ஒரே இரவில் பிணக் குவியலாக மாற்றிய தினம் இது.(8 லட்சம் பேர் வசித்தனர் போபாலில் அப்போது)





<

மேலும் 20000 பேர் படிப்படியாக இதன் தாக்கத்தால் பாதிக்கப் பட்டு மடிந்தனர் மற்றும் 2 லட்சம் பேர் இந்தக் கசிவால் பாதிக்கப் பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றும் கூட மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பார்வைக் கோளாறு,நுரையீரல் கோளாறு,சிறுநீரகக் கோளாறு, மலட்டுத்தன்மை,நோய் எதிர்ப்பு சக்தியின்மை போன்ற வியாதிகளால் அவதிப்பட்டு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் காசநோய் உள்ளவர்களது சராசரியை விட நாலு மடங்கு அதிகம் சராசரி போபாலில் இன்றளவும் நிலவுகிறது




யூனியன் கார்பைடு கம்பனி மீதான கிரிமினல் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்தக் கம்பெனியே தலை மறைவானதும் அதற்கெதிராக இந்திய அரசு வலுவாக செயல் படாததும் ஒரு புறமென்றால் அந்த கம்பனியை 'டோவ் கெமிகல்ஸ்' என்ற கம்பெனி வாங்கி , இந்தியாவில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதும், அம்பானியின் ரிலையன்ஸ் அவர்களுடன் கை கோர்ப்பதும், ரத்தன் டாடா போன்றோர் ஆதரவு தருவதும் என்னவென்று சொல்ல?

யூனியன் கார்பைடின் அப்போதைய தலைவராக இருந்த வாரன் ஆண்டர்சன் இன்றும் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்கிறார்.விஷ வாயு (இரசாயன)ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகப் பட்டதின் பேரிலேயே ஈராக் நாட்டையே துவம்சம் செய்து சதாமை தூக்கிலேற்றியும் ஓயாத அமெரிக்கா வாரன் ஆண்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிற்கு அனுப்ப மறுத்தது எந்த ஊர் நாட்டாமையோ தெரியவில்லை.

இந்தியா கல்கத்தா டெஸ்டில் ஜயிக்குமா ஜயிக்காதா , நடிகை காவேரியை காமெரா மேன் வைத்தி ஏமாற்றினாரா இல்லையா என பதை பதைக்கும் ஊடகங்களுக்கு போபால் பற்றி அந்த நிகழ்வு, நினைவு, சோகம் மற்றும் படிப்பினை பற்றி கூற இரண்டே இரண்டு நிமிடம் ஒதுக்க முடியவில்லை.ஏனென்றால் 23 வருடங்களுக்கு முன் இழந்த 22000 உயிர்கள் அவ்வளவு சுவாரசியமில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற விஷயம் "டோவ் கெமிகல்ஸ்" கம்பெனியின் சட்டவல்லுனர் அபிஷேக் மான் சிங்வி தான் போபால் விஷ வாயு கசிவிற்கு பிறகு அது சம்மந்தமாக பிரதம மந்திரி அலுவலகத்திற்கு அன்று சட்ட ஆலோசனைக் குறிப்புகள் கொடுத்தவர். ( இவர்களுக்கெல்லாம் மனிதாபிமானம் என்ற ஒன்றே கிடையாதா...எல்லாமே பணம் மட்டும்தானா ? )

இத்தனையிலும் ஒரு ஆறுதலான விஷயம் சென்னை மற்றும் மும்பை IIT மாணவர்கள் மனிதாபிமான அடிப்படையில் "டோவ் கெமிகல்ஸ்" வேலையை புறக்கணித்ததுமல்லாமல் அவர்களை கல்லூரி வளாக தேர்வுக்கும் வரவொட்டாமல் தடுத்து விட்டனர்.கான்பூர் ஐ ஐடியிலும் இது போன்றதொரு நடவடிக்கை பரிசீலிக்கப் படுவதாகவும் தெரிகிறது.

மனித வரலாற்றின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தில் பலியான 22000 உயிர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் அதே வேளையில் இது போன்ற துயரங்கள் மேலும் நடவாமலிருக்க நம்மால் இயன்றதை செய்வோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோமாக.

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

ச.சங்கர் said...

நல்ல பதிவு பாலா

ச.சங்கர் said...

பாலா
உச்ச நீதி மன்ற மற்றும் அமெரிக்க கோர்ட்டுகளின் தீர்ப்புக்குப் பின் கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகையான 465 மில்லியன் டாலரில் முக்கால் வாசிப் பணம் இன்னும் பட்டு வாடா செய்யாமலேயே முடங்கிக் கிடக்கிறதாம்

இந்த வழக்குகள் முடிந்து மக்களுக்கு பணம் கிடைக்க இன்னும் ஒரு 8 ஆண்டுகள் ஆகலாம் என சொல்லப் படுகிறது..33 வருடங்கள்...அதாவது ஒரு தலைமுறை மறைந்தே போயிருக்கும்...அடுத்த தலைமுறை மறந்து போயிருக்கும்.
யூனியன் கார்பைடு தொழிற்சாலை இயங்காவிட்டாலும் அதன் ரசாயன கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் நிலத்தடி நீரை மாசு படுத்திக் கொண்டு அங்கேயேதான் நிற்கிறது :(
நம்மால் அந்த உயிர்களுக்கு செய்ய முடிந்த அஞ்சலி "டோவ் கெமிகல்" இந்தியாவில் வருவதை எதிர்த்து குரல் கொடுப்பது.. atleast..பாதிக்கப் பட்ட மக்களுக்கு முழு நிவாரணம் கிடைத்து முடியும் வரையிலாவது :(

enRenRum-anbudan.BALA said...

Sankar,
Thanks for the additional information !

said...

pathivukku nanRi ...

K.R.அதியமான் said...

A question about economic polices in India in 1984, for probabale cause of the Bhopal disaster :

To : Union Carbide Ltd

Dear Sirs,

I am a Indian entrepreneur based in Chennai,India and very much intersted in economic polices
and free enterprise system.

Until 1991 India was in the vice like grip of socialistic economic polices intiated by Congress party from 1952. Free enterprise was
throttled and excessive goverment controls and regulations strangeled our economy and corrupted our system.

There was (and still is) no proper exit policy for loss making and failed industries. And labour
laws are still rigid.

I am trying to research about such aspects. There is very little data available about the business profits and losses of Union Carbide India Ltd and its Bhopal plant. Declining sales and
profits were reported. Was the plant under utilised ? Suppose if exit and labour policy in India were similar to USA in 1984, could the tragedy been prevented ? Was UCIL unable to close or sell its assets or wind up its unviable
operations in India due to legal and economic polices followed in 1980s ?

Was the Bhopal plant making losses and unviable, but forced to operate due to polices of government ? Was UCIL prevented from closing or liquaditing
or selling its assets by socialistic polices of govt of India at that time (before 1984) ?

Fertiliser policy is still a muddle and has resulted in making many govt and private units sick.

Can you please send a detailed answer to my above queries ?

Thanks & Regards

K.R.Athiyaman

Balaji said...

How the Rajiv government screwed up on Bhopal

http://churumuri.wordpress.com/2007/12/04/how-the-rajiv-government-screwed-up-on-bhopal/

வெட்டிப்பயல் said...

Felt very bad after reading this :-(

Boston Bala said...

மிக மிகத் தேவையான பதிவு

தொடர்புள்ள ஆவணப்படம்: Link TV | Programs | Litigating Disaster

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலா

அரசியலில் மட்டுமல்ல...
பிசினசிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை! நிரந்தர பகைவர்களும் இல்லை!
அதனால் போபால் விபத்துக்காக அவர்கள் ஆத்ம ரீதியாக் கோபப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் வீண் தான்!

//மும்பை IIT மாணவர்கள் மனிதாபிமான அடிப்படையில் "டோவ் கெமிகல்ஸ்" வேலையை புறக்கணித்ததுமல்லாமல் அவர்களை கல்லூரி வளாக தேர்வுக்கும் வரவொட்டாமல் தடுத்து விட்டனர்//

இது தான் மாணவர்கள் மாண்பு!

கல்லூரியில் இருக்கும் பசங்களின், பெண்களின் சிந்தனை போல அப்படி ஒரு பரிசுத்தமான சிந்தனைகளை, நானும் கல்லூரியில் கண்டதோடு சரி!

அதற்கு அப்புறம் என்ன தான் வாழ்க்கைச் சுழலில் இருந்து விட்டாலும், கல்லூரியின் நாட்கள் தான் கொஞ்சமாவது தார்மீகத்தை இன்னும் நம்முள் விதைத்து இருக்கு!

enRenRum-anbudan.BALA said...

Balaji, அதியமான், வெட்டிப்பயல், பாஸ்டன் பாலா, கண்ணபிரான்
அஞ்சலியில் பங்கெடுத்துக் கொண்டமைக்கு நன்றி.

கண்ணபிரான்,
நீங்கள் கூறுவதில் உண்மையில்லாமல் இல்லை !

பாபா,
லிங்க் கொடுத்தமைக்கு, அந்த நீண்ட மடலுக்கும் (!) மிக்க நன்றி.

enRenRum-anbudan.BALA said...

// Balaji said...
How the Rajiv government screwed up on Bhopal

http://churumuri.wordpress.com/2007/12/04/how-the-rajiv-government-screwed-up-on-bhopal/
//
Thanks ! Your link was informative.

Unknown said...

டவ் கெமிக்கல்ஸ், யூனியன் கார்பைட் கம்பெனிய வாங்கி நல்லாத்தான் இருக்கு. டவ் கெமிக்கலின் இந்திய முதலீட்டுக்கு உதவுவதா, ரத்தன் டாட்டா வாக்குறுதி குடுத்துருக்கார். யூனியன் கார்பைட் கம்பெனி முதலாளி ஆண்டர்சன் இன்னும் சுகபோகமாதான் வாழ்ந்துகிட்டு இருக்கான். அமெரிக்காவுல. இராக்குல 100 பேர விஷவாயு வச்சு கொன்ன சதாம கண்ணுக்குத் தெரிஞ்ச புஷ்ஷுக்கும், டிக்குக்கும் (ரெண்டு அர்த்தத்துல எடுத்துகிட்டா நான் பொறுப்பில்ல), லட்சக்கணக்குல போபால்ல கொன்ன ஆண்டர்சன் கண்ணுல பட மாட்டேங்குறான்.

ஐஐடி சென்னையிலேருந்தும், டவ் வெளில போய்டுச்சு.

இந்த சுட்டியக் கொஞ்சம் பாருங்க. அஞ்சலி செலுத்துங்க. பதிவுக்கு நன்றி, பாலா.

http://www.youtube.com/watch?v=ewe4CJJRVrY

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails